Posts

 உம்மை போல யாருண்டு

Image
உம்மை போல யாருண்டு நன்மை செய்ய நீருண்டு உம்மைத் தானே நம்புவேன் என் தேவா   உம்மைதான் எந்தன் வாழ்வில் ஆதாரமாய் நினைத்து உள்ளேன் நீர் இல்லா எந்தன் வாழ்க்கை வீணாய் தானே போகுதைய்யா எல்ஷடாய் ஆராதிப்பேன் எலோஹிம் ஆராதிப்பேன் அடோனாய் ஆராதிப்பேன் இயேசுவே ஆராதிப்பேன்   கலங்கி நின்ற என்னைக் கண்டு கண்ணீரைத் துடைத்தவரே காலமெல்லாம் கண்மணிபோல கரம்பிடித்து காத்தவரே மரணத்தின் பாதைதனில் மனம் தளர்ந்து நின்ற என்னை மருத்துவராய் நீரே வந்து மறுவாழ்வு தந்தீரைய்யா

 தனிமையின் பாதையில்

Image
தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில் சுமந்ததை நான் மறப்பேனோ ஆ.. எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் --- தனிமையின் 1. சோர்ந்து போகும் நேரங்களெல்லாம் மார்போடு அணைத்துக் கொண்டீரே கண்ணீரை கணக்கில் வைத்தீரே ஆறுதல் எனக்கு தந்தீரே --- ஆ.. 2. உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம் அடைக்கலம் எனக்கு தந்தீரே தடுமாறும் வேலையிலெல்லாம் தகப்பன் போல சுமந்து சென்றீரே --- ஆ.. 3. பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம் என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே இதற்கு ஈடு என்ன தருவேன் நான் --- ஆ.

 மறவாமல் நினைத்தீரையா

Image
மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் இரவும் பகலும் எனை நினைத்து இதுவரை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஆ.... ஆ.... கோடி கோடி நன்றி ஐயா எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே எப்படி நான் நன்றி சொல்வேன் பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா சுகமானேன் சுகமானேன் தழும்புகளால் சுகமானேன் என் குடும்ப மருத்துவர் நீரே தடைகளை உடைத்தீரையா தள்ளாடவிடவில்லையே சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கி என்னை சுமந்து வாக்கு தந்து தேற்றினீரே குறைவுகள் அனைத்தையுமே மகிமையிலே நிறைவாக்கினீரே-என் ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து மீதம் மீதம் எடுக்கச் செய்தீர்

 மன்னிப்பவன்தான் மனிதன்

Image
மன்னிப்பவன்தான் மனிதன் மன்னித்து மறப்பவன் மனித தெய்வம் -2 எண்ணிக்கை இல்லாத நம் பிழையை இறைவன் மன்னித்து மறந்தாரே இல்லையேல் மண்ணில் வாழ்வார் யாரே மன்னிப்பவன்தான் மனிதன்.... சுந்தர மழலைகளை சுட்டடெரித்த நெருப்பை மன்னித்து மறந்துவிட்டோம் நம் சொந்தங்களை சொத்துக்களை கொண்டுபோன கொடும் சுனாமியை மறந்துவிட்டோம் - 2 எந்த மனிதன் குற்றம் புரியவில்லை இங்கு மன்னிப்பு இல்லையேல் மறுவாழ்வில்லை         (மன்னிப்பவன்தான் மனிதன்) தன்னைப்போல் அயலாரை அன்பு செய்யும் மாந்தர் மன்னித்து மகிழ்ந்திருப்பார்  பிறரை மன்னிக்கவே மனமின்றி இருப்போர்கள் தீரா நோய்களில் உளன்றிருப்பார் -2 மன்னிப்பவர்க்கே குற்றம் மன்னிக்கப்படும் என்று நம் தேவன் இயேசு நம்மை மன்னிக்கவே வந்தார்         (மன்னிப்பவன்தான் மனிதன்) எண்ணிக்கை இல்லாத நம் பிழையை இறைவன் மன்னித்து மறந்தாரே இல்லையேல் மண்ணில் வாழ்வார் யாரே மன்னிப்பவன்தான் மனிதன்....

 தேவகுமாரா தேவகுமாரா

Image
தேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்க தேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க நீங்க நினைச்சா ஆசீர்வாதம்தான் என்ன மறந்தா எங்கே போவேன் நான் - நீங்க நினைச்சா             (தேவகுமாரா தேவகுமாரா) உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும் தேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்கு புரியும் -2 உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே -2 நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே -2             (தேவகுமாரா தேவகுமாரா) உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது உமக்கே தெரியும் உம்மை மறுதளித்தவன் நான் இதை உலகே அறியும் -2 உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாம என் பொழுது விடியாதே -2 நீங்க இல்லாம என் பொழுது விடியாதே -2             (தேவகுமாரா தேவகுமாரா)

 உம் அழகான கண்கள்

Image
உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்ததென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து தேடி வந்த நல்ல நேசரே தூக்கி எறியப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே ஒன்று இல்லாத என்னை காருண்யத்தாலே உயர்த்தி வைத்த நல்ல நேசரே

 அன்பென்ற மழையிலே

Image
அன்பென்ற மழையிலே  அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே வைக்கோலின் மேலொரு  வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே, அன்பென்ற மழையிலே  அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே  அதிரூபன் தோன்றினானே போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே புகழ்மைந்தன் தோன்றினானே புகழ்மைந்தன் தோன்றினானே, கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும் கருணைமகன் தோன்றினானே நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் ஒளியாகத் தோன்றினானே இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே இறைபாலன் தோன்றினானே முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன் தோன்றினானே, அன்பென்ற மழையிலே  அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே வைக்கோலின் மேலொரு  வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே  வந்தவன் மின்னினானே, அன்பென்ற மழையிலே  அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே  அதிரூபன் தோன்றினானே வைக்கோலின் மேலொரு  வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே  வந்தவ