ஆழமான ஆழியிலும்


ஆழமான ஆழியிலும்
ஆழமான அன்பு
உயர்ந்த மனிதனிலும்
உயரமான அன்பு
அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு
விவரிக்க முடியாத
அற்புத அன்பு
                               (ஆழமான ஆழியிலும்)

இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு
புறம்பே தள்ளாத பூரண அன்பு -2

இது ஒப்பில்லாத அன்பு, பூரண அன்பு -2

குழியில் விழுந்தோரை
குனிந்து தூக்கும் அன்பு
குப்பையில் இருப்போரை
எடுத்து நிறுத்தும் அன்பு -2
ஒடுக்கப்பட்டோரை உயிர்த்திடும் அன்பு
எந்தக் காலத்திலும் மாறாத அன்பு -2
                           (இது ஒப்பில்லாத)
                           (இயேசுவின் அன்பு)

மனிதர்கள் மாறினாலும்
மாறிடாத அன்பு
மகனாய் ஏற்றுக்கொண்ட
மகா பெரிய அன்பு -2
என்னை மீட்பதற்காய் உலகத்திலே வந்து
தன்னையே தந்துவிட்ட தகப்பனின் அன்பு -2
                           (இது ஒப்பில்லாத)
                           (இயேசுவின் அன்பு)

Comments

Popular posts from this blog

Neerae Vol 01 Worship Songs Bro:- Gersson Edinbaro...

Neerae Vol 02 Worship Songs Bro:- Gersson Edinbaro...